“சிறந்த உணவுத் தொழிற்சாலை” விருது பெற்ற அஸ்வின்ஸ் நிறுவனம்! தனியார் குழுமத்தின் PINNACLE AWARDS பெற்று அசத்தல் ! – அமைச்சர் மா. சுப்ரமணியன் விருது வழங்கி பாராட்டு
சென்னையில் தனியார் குழுமம் சார்பில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் அஸ்வின்ஸ் இனிப்பு மற்றும் சிற்றுண்டி நிறுவனத்திற்கு (Aswins Sweets and Snacks, Perambalur) “Best Food Factory” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் Dr. K. R. V. கணேசன் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் குழுமம் ,40க்கும் மேற்பட்ட கிளைகள், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் உணவுத் தொழிற்சாலை, 200க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள், அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி என வரலாறாய் வளர்ந்து நிற்கிறது. உணவின் தரத்தை உறுதிப்படுத்துதல்,வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு தயாரித்தல் என்பதை தாரக மந்திரமாய் மனதில் நிறுத்தி இன்றளவும் செயல் படுவதே இந்த வெற்றிக்கு பிரதான காரணம் ஆகும்.
அஸ்வின்ஸ் உணவுத்தொழிற்சாலையில் பயன்படும் மூலப்பொருட்கள் மிகத் துல்லியமாக தேர்வு செய்தல், கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படாது போன்றவை எவ்வித சமரசமும் இன்றி கடைபிடிக்கபடுகிறது.
செயற்கையான வண்ணங்கள், ரசாயனங்கள், அல்லது செயற்கை பாதுகாப்புப் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் தரச் சான்றுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வருகிறது போன்ற காரணிகளால் வாடிக்கையாளர்கள் அஸ்வின்ஸ் பட்சணங்களை பெரிதும் விரும்பி வாங்குகின்றனர்.ஒரு உணவின் சுவை மட்டுமல்ல, அதன் தூய்மை , தரம் கூட முக்கியம் என்பதை நிரூபித்தவர் அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் Dr. K. R. V. கணேசன். இதன் காரணமாக அஸ்வின்ஸ் குழுமம் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது விகடன் குழுமத்தின் PINNACLE AWARDS 2024 விருதை பெற்று பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது அஸ்வின்ஸ் குழுமம்.

சென்னை ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற விகடன் குழுமத்தின் PINNACLE AWARDS 2024 விருது வழங்கும் விழாவில், பெரம்பலூர் அஸ்வின்ஸ் இனிப்பு மற்றும் சிற்றுண்டி நிறுவனம் (Aswins Sweets and Snacks, Perambalur) “Best Food Factory” விருதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வழங்கி பாராட்டினார்.
தரமான உணவுப் பொருட்கள் தயாரித்து, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றதற்கான மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருது இந்த விருது வழங்க பட்டுள்ளது. உணவுத்தொழிலில் சுத்தம், தரம், சுவை – மூன்றையும் சமநிலைப்படுத்தும் நிறுவனமாக அஸ்வின்ஸ் நிறுவனம் மென்மேலும் பல விருதுகளை பெற்று வளர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
