ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, இவர்கள் தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகிறது.
துவக்கம் முதலே திமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 23,227 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 2790 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 20,437 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார்.