வேலூர் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் சித்தூரைச சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் பயணம் செய்த சிலர். கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அவர் கழிவறைக்கு சென்றபோதும் விடாமல் பின்தொடந்து சென்ற நபர்கள் தொந்தரவு செய்துள்ளனர். அப்போது கர்ப்பிணி பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், ஆத்திரமடைந்த நபர்கள் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், கர்ப்பிணி பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளி விட்டது கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது செல்போன் பறிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.