• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஜடேஜா புதிய சாதனை

ByP.Kavitha Kumar

Feb 7, 2025

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சால்ட் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து டக்கெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் களமிறங்கிய ஹாரி புரூக் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, ஆடிய ஜோ ரூட் 19 ரன்களில் வெளியேறினார். இவர்களை அடுத்து ஆடிய பட்லர் 52 ரன்களிலும், பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்ச்சர் 21 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் நிதானமாக ஆடி 87 ரன்களைக் குவித்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களிலும், அக்சர் படேல் 52 ரன்களிலும், கே.எல்.ராகுல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 38.4 ஓவரில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய ஆல் ரவுண்டரான ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதைச் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதைத் தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார்