சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் நரி கோட்டை அருகே உள்ள கருவேல் மரங்களை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் அதிகமான குடியிருப்பு இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக கருவேல் மரங்கள் மண்டி செடி, கொடிகளால் அப்பகுதி அருகில் குடியிருக்கும் மக்களுக்கு இடையூறாக இருந்தது. அதுமட்டும் அல்லாது விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளதாக தெரிய வந்த நிலையில், மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் காடுகள் மண்டியிருந்த சூழலால் , கனிம கொள்ளை ஏற்பட்டதாகவும், அப்பகுதியில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து அப்பகுதியில் உள்ள கருவேல்களை சுத்தம் செய்து உதவியது போல், அடர்ந்து அருகில் இருக்கும் கருவேல்களையும் சுத்தம் செய்ய பொதுமக்கள் கூறி வருகின்றனர். நரி கோட்டை பகுதியை சுத்தம் செய்து, மேலும் வழித்தடங்களை தூய்மையாக வைத்து அப்பகுதி வழியாக செல்லும் குடியிருப்புகளுக்கு ஏதுவாக உதவி செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அவர்களுக்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.





