• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம்-விஜய்வசந்த் எம்.பி

நிதி அமைச்சரின் பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது. தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் குமரி மாவட்ட செய்தியாளர்களுக்கு கடிதம் அளித்துள்ளார்.

ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் இந்த நிதியாண்டின் பட்ஜெட்- ல் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் நிலவி வரும் பெரும் சவால் விலைவாசி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பின்மை. ஆனால் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, நிதியமைச்சர் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம். விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பினை இந்த அரசு தவற விட்டுள்ளது. மிக முக்கியமாக ஊரக பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு எதுவும் இல்லை. தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையினை வழங்கவும் அறிவிப்பு எதுவும் இல்லை என்பது வருத்தம் அளிக்கும் ஓன்று.

அது போன்று கல்வி துறையையும் இந்த அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. கல்வியில் முதலீடு செய்து, வரும் தலைமுறை உருவெடுப்பதற்கு பட்ஜெட்டில் ஏதும் இல்லை. காலநிலைமாற்றம், மாசு கட்டுப்பாடு, திடக்கழிவு போன்ற முக்கிய திட்டமிடுதல் எதுவும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி மற்றும் திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
அரசியல் லாபத்திற்காக பீகார், டெல்லி மாநில தேர்தலை மனதில் கொண்டு வகுக்கப்பட்ட பட்ஜெட் ஆகவே இதை நான் பார்க்கிறேன் என அவரது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.