மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி கும்பமேளா நடைபெறும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிர்வாகச் சீர்கேடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து விவிஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கும்பமேளாவில் கலந்து கொள்ள நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்