• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புலம்பும் விருதுநகர் போலீஸ் அதிகாரிகள்…

Byகாயத்ரி

Nov 24, 2021

சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வேலையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதாகாவும் புலம்பி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார்.


இந்த விஷயம் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் போக உடனடியாக அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் முகாமை அமைத்து கொடுத்தார்.அதன்படி இன்றும் அது நடைமுறையில் உள்ள நிலையில் விருதுநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு காவல்படி, உணவுபடி, வீட்டுவாடகைப்படி, பயணப்படி, இடம் மாறுதல் ஆணை இப்படி எதற்கும் கையெழுத்து போடாமல் தட்டிக்கழிக்கும் எஸ்பி மனோகரை கண்காணிக்க தென்மன்டல ஐஜி அன்புக்கு காவல் அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இப்படி தட்டிக்கழிப்பதனால் காவலர்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகுதாகவும் மன உலைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.விருதுநகர் மட்டுமில்லாமல் தென்காசியில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கும் இது போன்ற பல புலம்பல்கள் உள்ளது.இது குறித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.