• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தலைக்கவசம் வாங்கினால் தக்காளி இலவசம்..!

சேலம் கோட்டை பகுதியில் தலைக்கவசம் வாங்கினால் தக்காளி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது இதன் காரணமாக தக்காளி விலை கடந்த வாரம் 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் இந்த நிலையில் ஹெல்மெட் வாங்கும் மக்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்து சேலம் கோட்டை பகுதியில் ஹெல்மெட் கடை உரிமையாளர் அறிவிப்பு செய்துள்ளது பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


450 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது இதன் விற்பனையை திரைப்பட நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார் இதுகுறித்து அவர் கூறும்போது..,


தலைக்கு ஹெல்மெட் எவ்வளவு அவசியமோ அதுபோல சமையலுக்கு தக்காளி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தற்போது தக்காளி விலை 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

என்றும் பொது மக்களிடையே ஹெல்மெட் குறித்து விழிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலும் விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 450 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.