• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் சரண்டர்

BySeenu

Jan 31, 2025

கோவையில் கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரின் தீவிர விசாரனைக்கு பயந்து காருடன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்தனர். மேலும், காரை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி கோவைக்கு வந்து உள்ளார். கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அபிஷேக தனது காருக்கு பதிலாக அங்கு நின்றுகொண்டு இருந்த வேறு காரை எடுத்து சென்று உள்ளார். கார் குனியமுத்தூர் வரும் போது பெட்ரோல் நிரப்புவதற்கு அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தும் போது தான் வாகனத்தை மாற்றி எடுத்து வந்தது தெரியவந்து உள்ளது. அதை தொடர்ந்து வாகன எண்ணை வைத்து காரின் உரிமையாளரிடம் கார் ஒப்படைக்கப்பட்டதுடன். அபிஷேக்கை போலீசார் விசாரித்து அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

அதைதொடர்ந்து அபிஷேகின் தந்தை காவல் நிலையம் வந்து அபிஷேக்கை மீட்டு உள்ளார். இந்த நிலையில் அபிஷேக் நிறுத்திய கார் மர்ம நபர்கள் கடத்தி சென்று உள்ளது தெரியவந்ததை அடுத்து ராமநாதபுரம் போலிசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அராபஸ், மற்றும் போத்தனூர் பகுதியை சேர்ந்த இஷான் அகமது ஆகியோர் காருடன் வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளனர். மேலும் காரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்ற ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.