• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தபால் உரை வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Jan 30, 2025

சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு தபால் உரை வழங்கும் விழா நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையேற்று வெற்றிலை தபால் உரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவிற்கான நிகழ்ச்சி சோழவந்தான் தபால் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சோழவந்தான் வெள்ளாளர்உறவின்முறை சங்க நிர்வாகிகள் சுகுமார், திரவியம், வெற்றிலை கொடிக்கால்விவசாய சங்க தலைவர் திரவியம் மற்றும் மதுரை தபால் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் ரவிராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் மதுரை கோட்ட உதவி கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சோழவந்தான் சரக தபால் துறை ஆய்வாளர் மணிவேல் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், முன்னாள் கொடிக்கால் விவசாய சங்க தலைவர் ராஜ்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ் கலந்துகொண்டு தபால் உரையை பெற்றுக் கொண்டனர். இதில் வணிக வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்கணேஷ், சர்க்கரை குமார், சேர்மன் அய்யப்பன், கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், வெற்றிலை விவசாயிகள் தங்கராஜ், செல்வம், முருகேசன் மற்றும் நிர்வாகிகள் செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சிவராஜன், சோழவந்தான் தபால் நிலைய அதிகாரி காமாட்சி ஆகியோர் பேசினார்கள். தபால் துறை ரமேஷ் நன்றி கூறினார்.