• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் – வானிலை ஆய்வு மையம்

Byகாயத்ரி

Nov 24, 2021

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

நாளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.