குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய பலருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் கோவையைச் சேர்ந்த மூன்று காவல் துறையினரும் இடம் பெற்று உள்ளனர்.
கோவை உதவி கமிஷனர் கணேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் காவல் ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் தங்கள் சிறப்பான பணிகளுக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக காவல் துறை முழுவதும் 21 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த இந்த மூவரும் இடம் பெற்று உள்ளது கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இவர்களின் இந்த சாதனைக்கு கோவை மாவட்ட மக்கள் மற்றும் காவல் துறை சார்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


