நடிகை கமலா காமேஷ் உடல் நலம் குறித்து, பரவிய வதந்திக்கு தற்போது அவரின் மகள் உமா ரியாஸ் கான் முற்று புள்ளி வைத்துள்ளார்.
பிரபல நடிகை கமலா காமேஷ் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவருடைய மகள் உமா ரியாஸ் கான், இந்த தகவலை மறுத்துள்ளார்.
இறந்தது தன்னுடைய அம்மா இல்லை என்றும் தனது கணவர் ரியாஸ் கானின் தாய் ரஷீதா பானு தான் இறந்து விட்டதாகவும். கூறியுள்ளார். அவர் சில வருடங்களாகவே உடல் நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 72 என உமா தெரிவித்துள்ளார். இதன் மூலம் கமலா காமேஷ் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.