மதுரை அவனியாபுரத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக மதுரை மண்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலம் சார்பில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மைக் மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் பாதசாரிகள் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்மதுரை மண்டல நிர்வாக இயக்குனர்சிங்காரவேலன் மற்றும் ஓட்டுநர் பயிற்சி மைய உதவி மேலாளர் பூமிநாதன் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு செய்தனர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆசிரியர் ஜான் வெஸ்டிலின் பொது மக்களிடம் பேசும் போது மரணம் என்பது எதிர்பார்த்து வருவது அல்ல திடீரென நிகழ்வது ஆகையால் தங்கள் உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மேலும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் கைகளை உள்ளே வைத்து பயணம் செய்ய வேண்டும் பரோட்டின் ஒருபுறமே செல்ல வேண்டும் எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும்.


விபத்தை தவிர்க்க வேகத்தை தவிர்க்க வேண்டும் மனித உடலில் மூளையில் எட்டடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் தலையில் விபத்து ஏற்படும் போது 8 அடுக்கு பாதுகாப்பை மீறி மனித மூளையில் அடிபடுகிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் தங்கள் உயிரையும், வீட்டின் நலனையும் பாதுகாக்க பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
