அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ” ‘கூலி’ படத்தின் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 30 சதவீதம் ஜனவரி 13-ம் தேதியிலிருந்து 25-ம் தேதிக்குள் முடிவடையும்” எனவும் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் அரசியல் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், ” அரசியல் பற்றிய கேள்விகளைக் கேட்க வேண்டாம் என பல முறை உங்களிடம் நான் தெரிவித்துவிட்டேன்” என்று காட்டமாக கூறினார்.