சோழவந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர்ந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரி தொழிலதிபராக உள்ள இவர் தனது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்களுடன் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர்ந்தனர். இது குறித்து கிரி கூறுகையில் , தமிழகத்தில் தளபதியின் நல்லாட்சி தொடரவும் துணை முதலமைச்சர் உதயநிதி கரத்தை வலுப்படுத்தவும் மதுரை சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர்களுடன் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர்த்துள்ளேன் இதன் மூலம் 2026 இல் மீண்டும் தளபதியின் ஆட்சி அமைந்திட அமைச்சர் மூர்த்தி அவர்கள் கட்டளையிடும் பணிகள் செய்ய தயாராக இருக்கிறேன் சோழவந்தான் பகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்த பாடுபடுவேன் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவேன் இவ்வாறு கூறினார்








