சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியதின் பேரில் அக்கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்க நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து , சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.