உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக, மதுரை மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நாட்டாமை குடும்பத்தின் சார்பாக, முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை நல்லாட்சி தினமாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் திருவுருவ படத்திற்கு சிவமுருகன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பிரசாத்கண்ணன், பாண்டியராஜன், மனோகனேசன், தீபன் முத்தையா, சவுந்திபாண்டி, இந்திரா, பிரகாஷ், மூத்த நிர்வாகிகள் வனராஜ், போஸ், ஜெயவீரணன், பாபுராஜா, வட்சுமணராஜா, கலைசெல்வன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
