மதுரையில் இருந்து மலேசியா செல்லும் இண்டிகோ விமானம் முதல் நாளே இரண்டு மணி நேரம் தாமதமாகியது.
மதுரை விமான நிலையம் நேற்றிலிருந்து 24 மணி நேரம் சேவை தொடங்கிய நிலையில் இன்று மதுரையிலிருந்து முதல் முறையாக சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்லும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் இருந்து 8:45 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதுரையில் இருந்து 9:05 மணிக்கு சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானம் தாமதம் காரணமாக 8 45 க்கு வரவேண்டிய விமானம் 10:55க்கு வந்து மீண்டும் 11:15க்கு மலேசியா (பினாங்கு) புறப்படுகிறது.