• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருமண்டல பேராயர் வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

BySeenu

Dec 19, 2024

தன்னலமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும் கோவை திருமண்டல பேராயர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினார்.

உலக மக்கள் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் பண்டிகையை அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒற்றுமையாக. கொண்டாடுவோம் என தென்னிந்திய திருச்சபைகளின் கோவை திருமண்டல பேராயர் மறைதிரு திமோத்தி ரவீந்தர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியாக தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ந்தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் பிறப்பை கொண்டாடும் மக்கள், அவர் நமக்கு விட்டு சென்ற அன்பையும், சமாதானத்தையும்,ஒற்றுமையையும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய திருச்சபைகளின் கோவை திருமண்டல பேராயர் மறைதிரு திமோத்தி ரவீந்தர் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் செய்தியாக மூன்று நாம் அனைவரும் தாழ்மையாக இருக்க வேண்டும் என்ற செய்தி கிறிஸ்து பிறப்பில் இருப்பதாக குறிப்பிட்ட அவர்,அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்றார்.

இரண்டாவதாக நாம் பெறும் மகிழ்ச்சி மற்றவர்கள் அனைவரும் பெறும் வகையில் தன்னலமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றார்.

மூன்றாவதாக உலக மக்கள் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் பண்டிகையை அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒற்றுமையாக. கொண்டாடுவோம் என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தென்னிந்திய திருச்சபைகளின் கோவை திருமண்டல உப தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ், செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின்,பொருளாளர் அமிர்தம் மற்றும் வழக்கறிஞர்கள் ஸ்டான்லி ராஜா சிங் ,விஜய் ஆனந்த், பிரவீன் விமல் ஆகியோர் உடனிருந்தனர்.