கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டுகள் பொதுப் பணிக்கு ஊர் கூடி விழா கண்டார்கள்.
குமரி மாவட்டத்தின் பகுதியான கருங்கல்லில் உள்ள திடலில் காலையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்கும் பகுதி பொதுமக்கள் கூடும் சந்தை. அதே திடல் மாலை வேளையில் பொதுக்கூட்டம் அல்லது கலை, இலக்கிய உரையாடல் பகுதியாக மாறிவிடும்.
கருங்கல் சந்தையில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு.
குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவால் 1969_யில் வந்த நாகார்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை தமிழகம் மட்டும் அல்லாது டெல்லியும் வைத்த கோரிக்கை.

அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் சி.சுப்பரமணியம், அன்றைய தமிழக காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான பழ.நெடுமாறனை, குமரிக்கு அனுப்பி,இவருடன் அன்றைய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முகமது இஸ்மாயில், அன்றைய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மகாதேவன்பிள்ளை, அன்றைய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிரோன்மணி ஆகியோர் அடங்கிய குழு இரண்டு நாட்கள் மக்களின் கருத்தை கேட்டு, தமிழக காங்கிரஸ் தலைவரான சுப்பிரமணியத்திடம் தெரிவித்தார்கள். அதனை அடுத்து பெரும் தலைவர் காமராஜர் இரண்டு நாட்கள் குமரியில் பல்வேறு நிலையினரை சந்தித்த காமராஜர்,இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கருங்கல் சந்தை திடலில் நான் நாகர்கோவிலில் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டி இடுவதை தெரிவித்தார்.

கருங்கல் சந்தை பகுதிக்கு வெளியே நடந்த கருங்கல் ஜார்ஜின் 50_அண்டு பொதுப்பணி பாராட்டு கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் வியாபாரம் சங்கத்தினர் கருங்கல் ஜார்ஜின் பொது சேவையை பாராட்டினார்கள்.
விழா மேடையில் கேட்ட வாழ்துகளில். மக்களின் வாழ்க்கையில் ஏழை மக்கள்,ஆதரவு அற்றவர்களின் கோரிக்கை குரல் மாவட்ட நிர்வாகத்தின் பார்வையில் பட கருங்கல் ஜார்ஜ் நடத்திய பத்திரிகையின் பொயர்”கின்னஸ்”. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் உரிமை பெற்ற ஜார்ஜின் சட்டமன்ற பத்திரிகை பணியை கலைஞர்,எம்.ஜூ.ஆர்_யின் பாராட்டை பெற்றவர்.

குமரி மாவட்டத்தின் எல்லை, நெல்லை மாவட்டத்தின் தொடக்கப்பகுதியான காவல் கிணறு பகுதியில் உள்ள ISRO_அராய்சிமையத்தை திருநெல்வேலியுடன் இணைக்க வேண்டும் என்ற இவரது 8_ஆண்டுகள் இடைவெளியே இல்லாத போராட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமே அல்ல. அந்த நிறுவனத்தின் தலைமையகம் திருவனந்தபுரத்தில் இருந்ததால்.காவ்கிணறு பணி தளத்தில் கடைநிலை ஊழியர் முதல் விஞ்ஞானிகள் வரை மலையாள மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையில் எங்கள் பகுதியில் இயங்கும் நிறுவனத்தில் தகுதியுடைய தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்திலும் வெற்றி பெற்றார் என்பதை இந்த நிகழ்வில் பேசிய விஞ்ஞானி பென்சிகர் நினைவு கூர்ந்தார்.

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஞகத்தினை அழித்திடுவேன் என கோபம் கொண்ட மகா கவி பாரதியின் வார்த்தையை உண்மை ஆக்கும் வகையில் கடந்த 10_ ஆண்டுகளுக்கு மேலாக பசித்திருப்போர் இருக்கும் இடம் தேடி போய் உணவு கொடுப்பதை ஒரு சமூக கடமையாக செய்து வருகின்றார். கடும் மழை புயல் என்றாலும் தினம் 170_ இயலாத மக்களின் வசிப்பிடத்திற்கு சென்று இலவசமாக உணவை கொடுத்து வருகிறார்.

சாமி தோப்பு தலைமை பதியின் பூஜித குரு பாலபிராஜதிபதி அடிகளாருக்கு பாஜகவினர் கொடுத்த தெடர் இடையூறை தவிர்க்க பாலபிரஜாதி அடிகளாருக்கு துப்பாக்கி உடனான காவல்ரை, கருங்கல் ஜார்ஜின் பரிந்துரையை ஏற்று அரசு வழங்கியது.
கருங்கல் ஜார்ஜின் 50_ ஆண்டு பலன் கருதாமல் மக்கள் பணி செய்வதை பாராட்டி நடந்த கூட்டத்திற்கு. அந்த பகுதியில் வாழ்வோர் குடும்பம், குடும்பமாக வந்து பங்கேற்றது. அந்த பகுதி மக்கள் மனதில் கருங்கல் ஜார்ஜ் பெற்று உள்ள உயர்ந்த மரியாதையை காணமுடிந்தது.
நிகழ்வில் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாநில பொதுச் செயலாளர் டேவிட்சன், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் பால்ராஜ், மருத்துவர் அரவிந்த் உட்பட பல்வேறு பொது சமூகங்களின் சார்பில் பங்கேற்று கருங்கல் ஜார்ஜின் சேவையை பாராட்டினார்கள்.
