சிவகங்கை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்துள்ளார்.
வானிலை அறிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது.
ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. நேற்று மாலையில் இருந்து அதிகாலை வரை கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்தார்.