• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்

ByG.Suresh

Dec 4, 2024

நியாயவிலைக்கடை பணியாளர்கள் தேர்வு முடிவடைந்தவுடன் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டியளித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி சார்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுமானர்கள் தேர்வு வரும் 8ஆம் தேதி முதல் முடிவடைந்த பின் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பேட்டியளித்தார்.

சிவகங்கை 26 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் 35 சென்ட் அளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் புரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் திறந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரிய கருப்பன் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுமானர்கள் தேர்வானது எட்டாம் தேதி முடிவடைகிறது.

அது முடிந்த பின் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றும் 3440 பணியிடங்களுக்கு 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பட்டு உள்ளதாகவும், பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் தற்போது நடந்து வரும் நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு போது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் , நகர மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் , திமுக ஒன்றிய செயலாளர் ஜெயராமன், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.