• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

ByK.RAJAN

Dec 3, 2024

சர்வதேச உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (03.12.2024) காலை 10.00 மணிக்கு பயணியர் விடுதி முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு கோவில்பட்டி YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.
யெகோவாநிசி அறக்கட்டளை நிர்வாகி பிராங்க்ளின் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சமூக நலத்துறை இயக்குனர் அருட்திரு ஜெபக்குமார் ஜாலி அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார்.

பேரணி மெயின்ரோடு வழியாக CSI தூய பவுலின் ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. அதன் பின் மாற்றுத் திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது.

விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ செயலர் அருட்திரு இம்மானுவேல் வான்ஸ்றக் தலைமை வகித்தார். ராக்லான்ட் சபை மன்றத் தலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் வரவேற்றார். வார்த்தையினால் விடுதலை இயக்குனர் தூத்துக்குடி ஐசக் பாலசிங் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். உதவி குரு எப்ராயீம் ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 120 மாற்றுத் திறனாளிகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது. ஆஸ்குயித் அறக்கட்டளை இயக்குனர் அமல்ராஜ் நன்றிகூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆக்னஸ், அமலி ஜெனொக் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சமூகநலத்துறை ஊழியர்கள் செய்திருந்தார்கள்.