மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி கலந்து கொண்டு பேசும்பொழுது மனித உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி மாணவர்கள் புரியும் வண்ணம் சிறப்பாக பேசினார். மாணவர்கள் மனித உரிமைகளையும் கடமைகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தங்களது கடமைகளை பொறுப்புடன் செய்ய வேண்டும் அப்பொழுது தான் ஒரு நல்ல வளர்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

உதவித் தலைமை ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் குணசுந்தரி, முதுகலை புவியியல் ஆசிரியர் வீரவேல், பட்டதாரி ஆசிரியர்கள் சண்முகராஜன், தமிழரசி மற்றும் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முதுகலை வரலாறு ஆசிரியர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார். முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர்களும் மாணவர்களும் அரசியலமைப்புச் சட்டம் உறுதிமொழி எடுத்தார்கள்.








