• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

ByG.Suresh

Nov 25, 2024

கொல்லங்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொல்லங்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 100க்கும் மாணவர்கள் பயின்று வந்த நிலையில் நடப்பாண்டில் 76 மாணவர்கள்மட்டுமே பயின்று வருகின்றனர்.
இங்கு தலைமை ஆசிரியராக தேவ சேனா என்பவர் பணியாற்றி வருவதாகவும் இவர் பள்ளியில் ஆசிரியர்களோடு இணைந்து செயல்படுவதிலும், மாணவர்களை வழிநடத்திலும் பக்குவம் இல்லை என்றும் பள்ளி வளர்ச்சியில் அக்கறையே காட்டுவதில்லை எனவும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்களோடு தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்யக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.