குமரியில் கிருஸ்தவ மதத்தின் இரண்டு பிரிவினர் ஞாயிறு தேவாலாயங்களில்
திருப்பலிக்கு பின் ஒன்றிய அரசின் மணல் எடுக்கும் அனுமதியை
கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அரிய வகை மணல் ஆலையில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்,குமரி மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இந்த மணல் ஆலையை ஊக்குவிக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மண் எடுக்கும் அனுமதியை நிறுத்தி ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த என் ஜி ஓ காலனி புனித பாத்திமா அன்னை ஆலயம் மற்றும் தென் இந்திய திரு சபை சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் கிறிஸ்தவ அருட் கன்னியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.