• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம்

ByKalamegam Viswanathan

Nov 23, 2024

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம் கிடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் 60 வயது மதிக்கதக்க பெண் தண்ணீரில் அடித்து வரப்பட்டு முட்புதரில் சிக்கி அழுகிய நிலையில் வைகை ஆற்றில் இறந்து கிடந்தார்.
திருவேடகம் கூட்டுறவு சொசைட்டி எதிரே வைகை ஆற்றங்கரையில் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் தண்ணீரில் அடித்து வரப்பட்டு முட்புதரில் சிக்கி அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசி இருந்ததால் வைகை ஆற்று நீரில் மூழ்கி அடித்து வரப்பட்டாரா அல்லது யாரேனும் மர்ம நபர்கள்கொலை செய்து போட்டு விட்டு சென்றார்களா என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.