22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் 56,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வரை தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதுதான் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் நேற்று ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
