• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்

ByG.Suresh

Oct 29, 2024

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மாசில்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அகிலாண்டேஸ்வரி, சசிரேகா, சகாய சாந்தி, புவனா, தினேஷ்குமார் மற்றும் பள்ளியின் மாணவர் தலைவர் காவியன், மாணவர் தலைவி தான்யா ஶ்ரீ ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் உலக அமைதிக்காக சர்வமதப் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக வரவேற்பு நடனமும் அதனைத் தொடர்ந்து மழழையர் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குறிப்பாக தீபாவளிப் பண்டிகையின் வரலாற்றை நாடக வடிவில் அமைத்திருந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் இணைந்து மாசில்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்து உறுதிமொழி எடுத்தனர்.

இது குறித்து பள்ளிமுதல்வர் பாலமுருகன் கூறுகையில்: இந்த வருடம் தீபாவளி பண்டிகையை பசுமையாகக் கொண்டாடும் முயற்சியில் எங்கள் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கையை மதிப்பதோடு, சுற்றுச்சூழலை மாசிலிருந்து பாதுகாக்கும் எண்ணத்தோடு இந்த பண்டிகையை கொண்டாட அவர்கள் உறுதிமொழி எடுத்திருக்கின்றனர். பசுமை தீபாவளி விழாவில் அனைவரும் பங்கெடுத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்வதற்கான சில வழிகளை செயல்படுத்துமாறு எங்கள் மாணவர்களின் மூலம் இந்த சமூகத்திற்கு கொண்டு செல்கிறோம். இந்த உறுதி மொழியில் இயற்கை பொருட்களைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பது, பட்டாசுகளைத் தவிர்த்து விளக்குகளால் தீபாவளி மகிழ்ச்சி பரப்புவது, தங்களது இல்லங்களில் தயாரிக்கும் இனிப்புகளை அனைவருடனும் பகிர்ந்து மகிழ்ச்சியை பரப்புவது முதலான முக்கிய அம்சங்கள் அடங்கி இருக்கிறது என்றார். மேலும் இந்த தீபாவளி அனைவருக்கும் நல்லவைகளையும், உலக அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கவும் இறைவனைப் பிரார்த்திப்பதாக கூறி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவின் நிறைவாக பசுமை தீபாவளி கொண்டாடும் பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் புகையிலா பட்டாசு வழங்கினர்.
பள்ளியின் கலைத்துறை பிரிவு இயக்குநர் திருமதி.கங்கா கார்த்திகேயன், துணைத் தலைவர் தட்சிணா மூர்த்தி, ராம்தாஸ் மற்றும் செந்தில் குமார், செயலாளர் சுரேஷ்கண்ணன் பொருளாளர் கலைக்குமார், பொருளாளர் ஆகியோர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.