நாளை நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் நாளை வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்:“தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19-11-2021) மாலை 5 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால், மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணித்துள்ளார்.
இதன் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, 20-11-2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச் சேதம், நிவாரண நிதி குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







; ?>)
; ?>)
; ?>)