தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் மோப்ப நாய் கொண்டு சோதனை வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் புத்தாடைகள் நகைகளை வாங்கி வருகின்றனர். கோவையை பொறுத்தவரை ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி, பிரகாசம், கிராஸ் கட் சாலைகளில் அதிகமான துணி கடைகள், நகைகடைகள் இருப்பதால் மக்கள் அதிகளவு இங்கு வருகை புரிகின்றனர்.

பெரிய பெரிய கடைகள் மட்டுமல்லாமல் சிறிய சிறிய துணி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வெடிகுண்டு கண்டறியும் போலிசார் இப்பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









