கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறித்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வட்டாரகுழு உறுப்பினர் தனீஸ் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோனி துவக்கவுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் , கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை படகு துறையாக மாறி வருகிறது.பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் அபாயகரமாக உள்ளது.

பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.பேருந்து நிலையம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் சிவதாணு, மணிகண்டன், வெனீஸ், ராக்சினி, திலகா, புனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.