தமுமுக சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவாளி நகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கலகம் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்சல் பல்லடம் நகரத் தலைவர் யூசுப் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து கொடியேற்றினர்.
