கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதத் திட்டத்தை அமல்படுத்துதல், பணிக்கொடை வழங்குதல், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்று வருகிறது.
மேலும், இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு 22 ஆண்டுகளாக ஓய்வூதியம் பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்றும் 22 ஆண்டுகளாக தமிழக அரசு, அரசு ஊழியர்களை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.




