குமரி மாவட்டத்தில் பத்திர பதிவு சார் பதிவாளர்களின் லஞ்சம் வெறி தொடர்ந்து சிக்கும் சார் பதிவாளர்கள்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கணக்கில் வராத 33200 ரூபாய் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பெருமளவு லஞ்சம் புரண்டோடுகிறது. குறிப்பாக அனுமதி இல்லாத சொத்துக்களை பதிவு செய்வதும் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் ஆவணங்களை விடுவிப்பது அதற்காக பல ஆயிரங்கள் முதல் லட்சங்களில் லஞ்சம் பெறுவது தொடர்வதியாக உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் முன்னாள் மாவட்ட பதிவாளர் தலைமையில் சட்ட விரோத ஆவணங்களை பதிவு செய்து வைத்துவிட்டு அதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்களை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் முக்கிய குற்றவாளிகளை விடுத்து ஒரு சில அம்புகளை மட்டும் பல மாதங்களுக்குப் பிறகு குமரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விட்டு, அந்த ஆவணங்களை கூட இதுவரை கைப்பற்றாமல் அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காமலும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் புரையோடி வருகிறது. இந்நிலையில் கொல்லங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெருமளவு லஞ்சம் கை மாறுவதாக கிடைத்த தகவலின் படி குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையிலான போலீசார் இன்று 23-10-2024 மாலை திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ஆவண அறையில் உள்ள மர பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது அந்தப் படத்தை அங்கு மறைத்து வைத்ததாக சார்பதிவக ஊழியர் கேசவன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் மற்றொரு மர பீரோவில் 21 200 ரூபாயும் அலுவலக ஜூனியர் அசிஸ்டன்ட் வினோத்குமார் என்பவரிடம் இருந்து 1300 ரூபாயும் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து 5700 ரூபாயும் சேர்த்து மொத்தம் 33 ஆயிரத்து இருநூறு ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர் சார் பதிவாளர் பதவிக்கு உதவியாளர்களை நியமித்து சொத்துக்கள் பதிவு செய்வது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் லஞ்சம் என்பது புரையோடிப் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே தற்போது லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெட்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி பல்லாயிரம் ரூபாய் கைப்பற்றியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.




