நியாய விலை கடை விற்பனையாளர்கள் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவாளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தங்களின் 3 அம்சக் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம் பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி பணியாளர்கள் தங்களது மூன்று அம்ச கோரிக்கை அரசிடம் முன்வைத்தும் நிறைவேற்றாத அரசை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் விற்பனையாளர்களுக்கு ஒரு கிலோ அரிசியின் அபராத தொகை ரூ.25 ஆனால் தற்போது ரூ.45 ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.70 தற்போது ரூ.110 ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் ரூ.75 தற்போது ரூ.130 இவ்வாறு விலை உயர்த்தியதை கண்டித்தும், அரசு உப்பு தேயிலை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் சங்க செயலாளரின் அனுமதியின்றி முதன்மை சங்கங்கள் அவர்களின் சுய லாபத்திற்காக ஆட்டா மாவு சுக்கு மல்லி காபி தூள் வெடிபொருட்கள் சோப்பு உள்ளிட்ட பொருட்களை உபரியாக மக்களுக்கு பயன்படாத பொருட்களை விற்க கூறி விற்பனையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் பொது மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் விரோத போக்கை இந்த முதன்மை சங்கங்கள் மற்றும் அரசு உருவாக்குகிறது. இதனை கண்டித்தும் விற்பனையாளர்கள் 10 கிலோமீட்டருக்கு மேலாக சென்று பணி புரிவதால் பெண்கள் பலர் காலை 6 மணிக்குச் சென்று இரவு 11 மணி திரும்பும் நிலை இருப்பதால் இந்த நிலையை மாற்றவும், எங்களின் இந்த மூணு அம்ச கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதாக அறிவித்துள்ளனர் செல்லம்பட்டி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

