உசிலம்பட்டி அருகே மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்தவரை தட்டிக் கேட்ட ஹோட்டல் தொழிலாளி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காமாட்சி பேக்கரி பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சோனு பிரபாகரன், ஹோட்டல் தொழிலாளியான இவரது மனைவி சாந்திக்கும், சாந்தியின் அக்கா சுந்தரியின் கணவர் பிரபுவிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சோனு பிரபாகரனுக்கும், பிரபுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று வழக்கம் போல் ஏற்பட்ட தகராறில் சோனு பிரபாகரனை, பிரபு திருப்பிளியால் குத்தியதில் படுகாயமடைந்து மயங்கிய சோனு பிரபாகரன் செக்காணூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த படுகொலை தொடர்பாக பிரபு, அவரது மனைவி சுந்தரி, சுந்தரியின் சகோதரிகள் சாந்தி, செல்வி என 4 பேரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் கள்ள தொடர்பில் இருப்பதை தட்டி கேட்ட கூலி தொழிலாளி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.