தேனி பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கடையை நள்ளிரவு உச்ச நீதிமன்ற ஆணையை மீறி அத்துமீறி இரண்டு கடைகள் இடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தேனி காவல்துறையினர் மற்றும் தேனி நகராட்சி கண்டுகொள்ளாத அவலம்.
தேனி நகராட்சி பகுதியில் தேனி பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கடையை நள்ளிரவு உச்ச நீதிமன்ற ஆணையை மீறி, அத்துமீறி இரண்டு கடைகள் இடித்த அகற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேனி காவல்துறையினர் மற்றும் தேனி நகராட்சி கண்டுகொள்ளாத அவலம்.
பகவது அம்மன் கோவில் தெருவில் அழகிரி ராஜாவுக்கு சொந்தமான 12 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை அழகிரிசாமி தன்னுடைய பாப்பு ராஜா, கண்ணன் ராஜா, பெத்து ராஜா, ஆகிய மூன்று மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்து எழுதிக் கொடுத்து விட்டார்.
இந்த இடத்தில் 13 கடைகள் கட்டி மூன்று பேரும் சேர்ந்து கடையை வாடகைக்கு விட்டு வந்தனர். இந்த நிலையில் மூன்று பேருக்கும் இடையே கடைகள் உள்பட பல கோடி ரூபாய் சொத்துகள் சம்மந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவு பழைய நிலை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரில் பெத்து ராஜா என்பவர் தன்னுடைய பாகத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து நிலுவையில் இருக்கும் நிலையில் ராஜேந்திரன், முத்துக்குபேந்திரன் என்பவர்களுக்கு விலைக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று பேரின் பாகத்தில் ஒருவரின் பாகத்தை விலக்கி வாங்கியதாக கூறி உச்ச நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அத்துமீறி கடைகளை ஜேசிபி கொண்டு அடியாட்களை வைத்து நள்ளிரவு நேரத்தில் இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து தேனி காவல் நிலையத்தில் கண்ணன் ராஜாவின் மேலாளர் தேனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தேனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கடைகளை இடித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தேனி – மதுரை சாலையில் நள்ளிரவு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஜேசிபி வைத்து கடைகளை இடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.