உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்வாதால் பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இளைஞர் ஒருவர் துணை முதல்வர் ஆவதை வரவேற்கிறோம்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற இருப்பதால் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்..,
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு..,
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கிறார் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்த நிலையில் பொதுமக்களும் நாங்களும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம், பொதுமக்கள் நமக்கு இளைய சமுதாயம் வருகிறது அந்த இளைய சமுதாயம் நமக்கு ஓடி ஆடி வேலை செய்ய போகிறது என்று பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு..,
முதலமைச்சரின் முடிவு அதை யாரும் கேட்க முடியாது என்றார்.








