மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தா குருகுல கல்லூரிக்கு வருகை தர இருந்த தமிழக ஆளுநர் கே. என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுக்குழு உறுப்பினரும் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கண்ணுடையாள்புரம் ஆர். மூர்த்தி தலைமையில் ஆளுநர் கே. என். ரவி வருகையை கண்டித்தும் மத்திய பாஜக அரசின் தேசிய விரோத கொள்கைகளையும் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மீது பல்வேறு மாநில எம்எல்ஏ எம்பிக்களின் மூலம் அவதூறு பரப்பியும், தேச விரோத கொள்கைகளையும், வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி வரும் பாஜக நிர்வாகிகளையும் கண்டித்து, கே. என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை மாவட்ட அளவில் ஆன நிர்வாகிகள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்தபோது ஆர். மூர்த்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் மதுரை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்று சோழவந்தான் ஆர். எம். எஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சோழவந்தான் போலீசார் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.