சிவகங்கை கௌரி விநாயகர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 13 வீடுகள் அகற்ற வாரிசு தார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருது தெரிந்து, சிவகங்கை மேலூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
சிவகங்கை கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 13 வீடுகளை செப்.24ல் அகற்ற இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது .சிவகங்கை அருகே மேலூர் ரோட்டில் தென்நீர் வயல் குரூப்பில் கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி உள்ளனர். இந்த நிலத்தை கைப்பற்ற இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. கடந்த ஜூன் மாதத்தில் கோவில் நிலத்தை கைப்பற்றி பென்சிங் அமைத்தனர் .இந்த நிலத்திற்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டி உள்ள 13 வீடுகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது இதற்காக கோவில் செயல் அலுவலர் நாராயணி சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதே போன்று செப் 24 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி சிவகங்கை எஸ் பி பிரவீன் உமேஷ் டோங்கிரிவிடம் மனு செய்துள்ளனர். இதனால் செப். 24 அன்று சிவகங்கை கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்புள்ள 6.5 ஏக்கர் நிலத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை அறிந்து அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் ஈடுபட முயன்றனர். அதன் பின் பொதுமக்களிடம் தாசில்தார் சிவராமன், நகர்காவல் ஆய்வாளர் அண்ண ராஜா பேச்சு வார்த்தை நடத்தி நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து பீஸ் கமிட்டி அமைக்க உள்ளதாக தாசிலார் தெருவில் அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
