தேனி மாவட்டம், கூடலூரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி ராயல் பியர்ல் மருத்துவமனை, கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கம் மற்றும் பிளஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாகத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153வது பிறந்தநாள் முன்னிட்டு இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவர் மானஷி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். என்டாஸ்கோபி உள்பட நவீன மருத்துவ உபகாரணங்கள் கொண்டு சோதனைகள் செய்யப்பட்டன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.
காது கேட்பதில் குறைபாடு காதில் சீழ் வடிதல், குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராதது, தீராத தலைவலி மற்றும் தைராய்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பயனாளர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு ஆலோசனைகளும் கூறப்பட்டது.
கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்தினர் மற்றும் பிளஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாகத்தினர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
