மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்களே மருந்தானால் என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில்
மரக்கன்றுகளை வழங்கினார். தலைமை மருத்துவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

வக்பு வாரிய கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள் மூலமாக உதவி பேராசிரியர் முகமதுமின்னா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக அவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கி மணிகண்டன் பேசுகையில்: மரங்கள் மூலம் கிடைக்கும் ஆக்சிசன் காற்று தான் மனிதன் உட்பட பல உயிர்களுக்கும் முதல் மருந்து. நம் வாழ்நாளில் அதிகமாக மரக்கன்றுகள் நடுவது பல்லுயிர்களை பாதுகாக்கும் சாதனை என்றார்.

பாலகுருசாமி, செந்தில்குமார் உட்பட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








