சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வெளியில் ரோட்டோரமாக பசுமாடு ஒன்று பிறப்புறுப்பு தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகாலிங்கம், பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அந்த மாட்டை திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் எடுத்துச் சென்று அங்கேயே வைத்து மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்து மாட்டின் உயிரை காப்பாற்றினார், மாட்டின் உயிரை காப்பாற்றிய மகாலிங்கம் மருத்துவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.