தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரையில் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.
தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அக்கட்சியினுடைய தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை 11 மணியளவில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை தலைமையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கியும், வியாபாரிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. உங்கள் ஆதரவை 2026 தேர்தலில் தரும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.