மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழில்சங்கத்தினர் இன்று காலை சுமார் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டச்செயலர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வி.கருப்புச்சாமி, துணைச்செயலர் கே.பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய சங்க மாநிலத்தலைவர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலர் பா. மருது, மாவட்ட துணைச்செயலர் பி. சரவணன், தொழில்சங்க நகர பொருளாளர் ஜி.முருகன், மானாமதுரை ஒன்றிய பொருளாளர் பி.காளிமுத்து, காரைக்குடி நகரத்தலைவர் முத்தையாராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்: மத்திய, மாநில அரசுகள் புதிய மோட்டர் வாகன திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். மினி பஸ் இயக்குவதை அரசே நடத்த வேண்டும். தனியாரிடம் கொடுக்க வேண்டும்.ஆட்டோ செயலியை உடனே தொடங்க வேண்டும்.ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு உயர்த்திய சாலை வரியை திரும்ப பெற வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு அல்லது வீடு கட்ட ரூ 4 லட்சம் நிதி வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் கேஸ் மானிய விலையில் வழங்க வேண்டும். நலவாரிய திட்டத்தின் மூலம் மருத்துவ வசதி, நீதி உதவி வழங்க வேண்டும். 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு ரூ. 6,000 ஓய்வுதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
