காரியாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சர்வமதத்தினர் பங்கேற்று சிறப்பு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. விழாவுக்கு இன்பம் பவுண்டேசன் நிர்வாகி தமிழரசி தலைமை வகித்தார். விஜயகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் காரியாபட்டி நகரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கிருஷ்ணன் , ராதை, பலராமர் ஆகிய வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகள். சிறப்பாக வேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசுகள வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணர் வேடம் அணிந்து ஜாதி – மத வேறுபாடின்றி எல்லோரும் சமம் என்று எடுத்து காட்டும் வகையில் கிருஷ்ணர்வேடம் அணிந்து வந்த மாணவர் முகமது ஜலீலுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
