விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எஸ்.பி.எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிருபாகரன் , குருசாமி ஆகியோர முன்னிலை வகித்தனர். அப்துல் கலாமின முன்னாள் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் லயன்ஸ் கிளப் தலைவர் அழகர்சாமி, துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் விக்டர் பொருளாளர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ,